ads
மோகன்லாலுக்கு எதிராக எந்த மனுவிலும் நான் கையெழுத்திட வில்லை
விக்னேஷ் (Author) Published Date : Jul 24, 2018 11:31 ISTபொழுதுபோக்கு
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால், 1980ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 38 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்து ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ள இவர் தற்போது மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் விளங்கி வருகிறார்.
இந்நிலையில் விரைவில் நடக்க உள்ள மலையாள சினிமா விருதுகள் வழங்கும் விழாவிற்கு மோகன்லாலை அழைக்க கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சினிமா செய்தியாளர்கள் உள்பட 107 பேர் கேரளா முதல்வருக்கு மனு அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் , நடிகர் மோகன்லாலுக்கு எதிராக எந்த ஒப்புதலும் அளிக்க வில்லை என வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' சங்கத்தின் தலைவரான மோகன்லால், பிரபல நடிகையிடம் தவறுதலாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்ததில் இருந்து மோகன்லாலுக்கு எதிராக பல கருத்துக்கள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் கேரளா முதல்வரான பிரனாயி விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள கேரளா சினிமா விருதுகள் வழங்கும் விழாவிற்கு நடிகர் சங்க தலைவரான மோகன்லாலை அழைக்க கூடாது என்று கேரளா முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Clarifying... against s a wrong news doing the rounds pic.twitter.com/PIcyua2GA2
— Prakash Raj (@prakashraaj) July 24, 2018