Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டிராஃபிக் ராமசாமி படத்தில் நடிப்பதற்கு பெருமைப்படும் பிரகாஷ் ராஜ்

prakash raj joined in traffic ramaswamy movie

 விஜய் விக்ரம் இயக்கத்தில் தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களின் ஒருவரான  எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் உருவாகி வரும் படம், தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும்  சமூக போராளிகளின் ஒருவரான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமாகும். இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். மேலும் இவருடன் மனைவியாக ரோகிணி நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து முக்கிய வேடத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் படத்தின் சிறப்பு தோற்றத்தில் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதினை பற்றி பிரகாஷ் ராஜிடம் கேட்கும் போது 'தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக போராளியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தில் நான் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று கூறியுள்ளார். 

குகன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள பாலமுரளி பாலு இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன் உள்பட பலர் நடிக்கின்றனர்.           

டிராஃபிக் ராமசாமி படத்தில் நடிப்பதற்கு பெருமைப்படும் பிரகாஷ் ராஜ்