ads

சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒரு வழியாக சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழியாக சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக வரும் படம் '2.0'. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காகவே ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சலித்து விட்டனர். இந்த படத்தின் முன்னதாகவே வெளியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத தருணத்தில் இணையத்தில் திருட்டு தனமாக வெளியிட்டனர். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து டீசர் வெளியீடு தேதியை தள்ளி வைத்தது.

டீசர் இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பாத்திருந்த நிலையில் ஒரு வழியாக தற்போது இயக்குனர் சங்கர் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி இந்த படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தியில் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. 1:45 மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது.

ஒரு வழியாக இந்த படத்தின் இறுதி கட்ட பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர இன்று மாலை 6மணிக்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. இதனால் இன்று மட்டும் ரஜினி ரசிகர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு