Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வைபவின் 'R.K நகர்' படத்தின் புதிய தகவல்

rknagar movie shooting

'மேயதா மான்' வெற்றியை தொடர்ந்து வைபவ்  ‘வடகறி’ படத்தினை இயக்கிய சரவண ராஜன் இயக்கி வரும் ‘R.K நகர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக சனா அல்தப் நடித்துள்ளார்.இவர் 'சென்னை – 600028 II' படத்தில் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் முக்கிய வேடத்தில் சம்பத் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என புகழை கொண்ட வெங்கட் பிரபு இந்த படத்தினை 'ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து வெங்கட் பிரபுக்கு சொந்தமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின்  மூலம் ‘R.K – நகர்’ படத்தினை தயாரித்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக 'சென்னை – 600028 II' படத்தின் மூலம்  தயாரிப்பாளராக அறிமுகமானார், அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படத்தினை தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். மேலும் வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ளார். படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்ட போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததினை தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்திருந்த இந்நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்புகள் அனைத்து வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின்  ‘பிளாக் டிக்கெட் கம்பெனி' தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் மூலம் தகவலை தெரிவித்துள்ளது.

 

வைபவின் 'R.K நகர்' படத்தின் புதிய தகவல்