தெலுங்கு பிரபலத்துடன் நடிக்கும் சாய் பல்லவி

       பதிவு : Nov 17, 2017 15:40 IST    
sai pallavi stills sai pallavi stills

மலையாளத்தில் 'ப்ரேமம்' படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழ், மலையாளம் படங்களில் நடிப்பதோடு தெலுங்கு திரையுலகிலும் 'ஃபிடா' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில்எம்.சி.ஏ,கரு, மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.   

இதனை அடுத்து சாய் பல்லவி இரண்டாவது முறையாக தெலுங்கில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமான தெலுங்கு முன்னணி நடிகர் சர்வானந்த் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் அனைத்தையும் நேபாளத்தில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தினை இயக்கும் ஹனு ராகவபுடி காதலை மையமாக கொண்டு எடுக்கவிருப்பதாக கூறினார்.   

 

இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் பற்றிய எவ்வித தகவலும் வெளியிடாத நிலையில் இன்னும் சில நாட்களில் படத்தின் பற்றிய அதிகார பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.      
 


தெலுங்கு பிரபலத்துடன் நடிக்கும் சாய் பல்லவி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்