ads

3டியில் வெளியாகவுள்ள இயக்குனர் சங்கரின் 2.0 டீசர்

இயக்குனர் சங்கரின் பிரமாண்ட படைப்பான 2.0 படத்தின் டீசர் வெளியாவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளது.

இயக்குனர் சங்கரின் பிரமாண்ட படைப்பான 2.0 படத்தின் டீசர் வெளியாவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தின் டீசர் வெளியீடு தேதி ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் நீண்ட வருடமாக காத்து கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்குள் சங்கர் ஒரு வழியாகிவிட்டார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு டீசர் குறித்த அறிவிப்பு வந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஏமாந்து தான் போனார்கள். முன்னதாக இந்த படத்தின் டீசரை வெளியிட படக்குழு தயாராக இருந்த நிலையில் யாரோ ஒரு புண்ணியவான் அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதனால் எதிர்பார்க்கப்பட்ட 2.0 டீசர் வெளியாகாமேலே போனது. அட போங்கடா..நீங்களும் உங்க டீசரும் என ரசிகர்கள் சலிப்படைந்த நேரத்தில் இந்த படம் நவம்பர் 29ஆம் தேதியில் வெளியாவதாக தெரிவித்து ரசிகர்களை ஆறுதல் அடைய செய்தனர். இதனால் டீசரும் வேணா, டிரைலரும் வேணா படத்தை தியேட்டர்லே பாத்துக்குறோம் என படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்த நேரத்தில் தற்போது ஒருவழியாக டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதன்படி இந்த 1:45மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13, விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ளது. இது தவிர ரஜினி ரசிகர்கள் நேற்று வெளியான 'பேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மூலம் குஷியாக உள்ளனர். இதனால் தற்போது 2.0 மற்றும் பேட்ட என ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது. ஆனாலும் சங்கர் சார்.. இந்த முறையாவது கவனமா இருங்க..

3டியில் வெளியாகவுள்ள இயக்குனர் சங்கரின் 2.0 டீசர்