கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம்

       பதிவு : Jun 02, 2018 17:54 IST    
ஸ்ருதி ஹாசன் மற்றும் வித்யுத் ஜம்வால் நடிப்பில் கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது. ஸ்ருதி ஹாசன் மற்றும் வித்யுத் ஜம்வால் நடிப்பில் கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரியான ஸ்ருதி ஹாசன், இந்த படத்திற்கு பிறகு 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒருசில படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து இவர் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான பேகன் யோகி தேறி படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக வித்யுத் ஜம்வால் நடித்து வருகிறார்.

ஆக்சன் நாயகனான இவருடைய இந்த படமும் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக ஸ்ருதி ஹாசன் சண்டை பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவில் நிகழ்த்த உள்ளனர். கோவாவில் ஸ்ருதி ஹாசனின் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்க உள்ளனர். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஹீரோவுக்கு சமமான முக்கிய கதாபாத்திரம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 

இவருடைய கதாபாத்திரம் குறித்து இந்த படத்தின் இயக்குனர் கூறுகையில் "தற்போது ஸ்ருதி ஹாசன் இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவருடைய காட்சிகள் படமாக உள்ளது. இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும். கேங்ஸ்டர் படம் என்பதால் அவருக்கும் தீவிர சண்டை பயிற்சி அளிக்க உள்ளது. இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்