ads
ஜியார்ஜியாவில் துவங்கப்பட்ட சிம்பு சுந்தர் சியின் ரீமேக் படம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Sep 18, 2018 14:29 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி 'கலகலப்பு 2' படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தை சிம்புவை வைத்து உருவாக்க உள்ளார். இந்த படம் கடந்த 2013இல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற 'அட்டரண்ட்டிகி தேரடி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவுள்ளார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை ஜியார்ஜியாவில் துவங்கியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் சிம்புவின் ஓப்பனிங் சீன் படமாக்கப்பட்டது. இதில் சிம்புவின் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது மணிரத்னமின் 'செக்க சிவந்த வானம்' படத்தின் மூலம் சிம்புவிற்கு நிறைய பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
ஏஏஏ படத்தின் மூலம் கடும் விமர்சனங்களை பெற்று வந்த சிம்பு, இனிமேல் படப்பிடிப்பில் தாமதமில்லாமல் கலந்து கொள்வதாகவும், ரசிகர்களுக்காக படங்களில் ஒழுங்காக நடிப்பதாகவும் அவரே தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுந்தர் சியின் ரீமேக் படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.