எதிர்காலத்தில் விவசாயம் செய்ய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்
வேலுசாமி (Author) Published Date : Mar 14, 2018 17:05 ISTபொழுதுபோக்கு
இன்றைய தலைமுறையினர் விவசாயத்தை மறந்து நவீன வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். தற்போது விவசாயம் நடக்கும் இடமும், விவசாயிகளும் அரிதாகவே காணப்படுகின்றனர். இது போன்ற நிலைமை நீடித்தால் விவசாயம் என்பதே வருங்காலங்களில் இருக்காது. தற்போது விவசாயிகளின் போராட்டமும், அவர்களின் கண்ணீரும் திரும்பும் திசையெல்லாம் ஒலிக்கிறது.
சமீபத்தில் நாசிக்கிலிருந்து மும்பைக்கு 180 கிமீ தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடந்தே சென்றனர். இது போன்ற அவலம் நமது நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் நடக்காது. விவசாயித்தின் அருமையும் அதன் அழகும் கிராம மக்களை தவிர நகர வாசிகளுக்கு எளிதில் புரியாது. தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமான இளைஞர்கள் தங்களது படிப்பிற்கான வேலையை துறந்து விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
தற்போது படிப்படியாக விவசாயத்தின் அருமை மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஆரி விவசாயம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இதில் நடிகர் சிவகார்த்திகயேன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் "பிட்சா, பர்கர் போன்ற உணவுகளை என்னுடைய மகளுக்கு இன்றுவரை கொடுத்ததில்லை. விவசாயத்தை பற்றி இங்கு பேசியவர்கள் பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.
என்னுடைய வீட்டில் தற்போது கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். வருங்காலங்களில் இதை விட பெரிதாக விவசாயம் செய்ய ஆசைபடுகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற சினிமா பிரபலங்கள் அனைவரும் விவசாயத்திற்கு குரல் கொடுத்தாலும், களமிறங்கி விவசாயத்தை மேம்படுத்தினாலும் விவசாயம் செழிப்படையும், நாடு வளம் பெறும்.