ads

இணையத்தை கலக்கும் சுனைனாவின் டிரிப் படத்தின் போஸ்டர்

சுனைனாவின் டிரிப் படத்தின் போஸ்டர்

சுனைனாவின் டிரிப் படத்தின் போஸ்டர்

சுனைனாவின் பிறந்தநாள் பரிசாக டிரிப் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர் பார்க்கும் போது இது ஒரு த்ரில்லர் படம் போல் தெரிகிறது, ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால், இது காமெடி படமா அல்லது த்ரில்லர் படமா என்று தெரியும்.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வரும் இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன் நடித்துள்ளனர் என்றால் அனைவருக்கும் இது ஒரு காமெடி படத்தின் கதை தான் என்று நினைக்க தோன்றும்.

தனது நாய் மற்றும் நண்பர்கள் யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் டிரிப் செல்லும்போது இவர்கள் காட்டில் சிக்கிக்கொள்கிறார்கள், இதன் பின் நடக்கும் கதையில் காமெடி கலந்த த்ரில்லிங் அனுபவத்தை தர இருக்கிறார் இயக்குனர்.

கோடை விடுமுறையில் வெளியாக இருந்த படம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளிப்போனதாக தெரிகிறது, மற்றும் மே மூன்றாம் தேதிக்கு பின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இணையத்தை கலக்கும் சுனைனாவின் டிரிப் படத்தின் போஸ்டர்