ads

கெலம்பிட்டாலே ஆர்ஜே விஜயலட்சுமி - வெளியானது காற்றின் மொழி டீசர்

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டீசரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டீசரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜோதிகா நடிப்பில் 'நாச்சியார்' படத்திற்கு பிறகு அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'காற்றின் மொழி'. இந்தியில் வெளியான 'தும்ஹரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தினை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் ஜோதிகா, 'மொழி' படத்திற்கு பிறகு 10 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டொபர் 18ஆம் தேதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எடிட்டிங் பணி தாமதமானதால் 5:30 மணிக்கு வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ரேடியோ ஜாக்கியாக ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜோதிகா, நடிகர் விதார்த்துக்கு மனைவியாக நடித்துள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக மாற ஆசைப்படும் குறும்புத்தனமான விஜயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகனான ஏஹச் காசிப் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படம் இவருக்கு முதல் படம். மேலும் இந்த படத்தினை போப்ட்டா மீடியா வொர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

கெலம்பிட்டாலே ஆர்ஜே விஜயலட்சுமி - வெளியானது காற்றின் மொழி டீசர்