நடிகை தமன்னா நடிக்கும் தட் இஸ் மகாலட்சுமி

       பதிவு : Jun 06, 2018 15:57 IST    
ஸ்கெட்ச் மற்றும் நா நுவ்வே படங்களுக்கு பிறகு தமன்னா குயின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்கெட்ச் மற்றும் நா நுவ்வே படங்களுக்கு பிறகு தமன்னா குயின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிஸியான நடிகையான தமன்னா, ஸ்கெட்ச் மற்றும் நா நுவ்வே படங்களுக்கு பிறகு 9 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழில் கண்ணே கலைமானே மற்றும் சயிரா நரசிம்ம ரெட்டி படங்களும், தெலுங்கில் ஆ பா கா (Aa Ba Ka), சவ்யசாட்சி (Savyasachi) படங்களும், இந்தியில் காமோஷி போன்ற படங்களும் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து 2014இல் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படம் குயின் படத்தின் இயக்குனர் விகாஸ் பால் கைவண்ணத்தில், இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நீலகண்டன் இயக்க உள்ளதாக இருந்தது. ஆனால் தமன்னாவுக்கும், நீலகண்டனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்திற்கு 'தட் இஸ் மகாலட்சுமி (That Is Mahalakshmi)' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

பாரிசில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் சஞ்சய் சுவரூப், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது குயின் படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடித்து வருகின்றனர்.


நடிகை தமன்னா நடிக்கும் தட் இஸ் மகாலட்சுமி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்