Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 படக்குழு

டீசரில் தமிழ் சினிமா, அரசியல் போன்றவற்றை கலாய்த்தது போதாதென்று கடல் கடந்து ட்ரம்பையும் வம்புக்கு இழுத்துள்ளது தமிழ் படம் 2.0 படக்குழு.

இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'தமிழ் படம் 2.0'. இந்த படம் 2010இல் வெளியான 'தமிழ் படம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. ஒட்டு மொத்த சினிமாவையும் கலாய்க்கும் விதமாக வெளியான 'தமிழ்  படம்' ரசிகர்களிடம் பலத்த பரவெற்பினை பெற்றது. ஆனால் தற்போது இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில் சினிமா மட்டுமல்லாமல் அரசியலையும் சேர்த்துள்ளனர்.

ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த டீசரில் துப்பறிவாளன், விவேகம், துப்பாக்கி, மங்காத்தா மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, மெர்சல் போன்ற படங்களையும் காப்பி அடித்து கலாய்த்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான சிஎஸ் அமுதன் தற்போது சிங்கப்பூரில் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும், ட்ரம்ப் கிம் சந்திப்பையும் கலாய்த்து புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வரை தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியலையும் கேலி செய்து வந்த படக்குழு தற்போது கடல் கடந்து ட்ரம்பை வம்புக்கு இழுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 படக்குழு