தமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்

       பதிவு : Apr 13, 2018 19:25 IST    
10 திரையரங்குகளில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா 10 திரையரங்குகளில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா

தமிழ் பூத்தாண்டை முன்னிட்டு பிரமாண்டமாக மீண்டும் வெளியாகும் அஜித்தின் பில்லா திரைப்படம்.

தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் திரைப்படம் கூட வெளிவராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் என்றே கூறலாம். தமிழ் புத்தாண்டில் தமிழ் படம் வெளியாகாமல் இருப்பது இதுவே முதன்முறை. இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த நடிகர் அஜித் ரசிகர்கள், 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பில்லா (முதல் பாகம்) திரைப்படத்தை கோயம்பத்தூர் மற்றும் அதன்  சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 திரையரங்குகளில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா படத்தின் மூலம் 2018 தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் பட்டியல் 
1. சாந்தி - கோவை
2. காவேரி - கோவை
3. கிருஷ்ணா - ஈரோடு
4. M.T.S - திருப்பூர்
5. K.S - திருப்பூர் 
6. சாந்தி - பொள்ளாச்சி 
7. அபிராமி - மேட்டுப்பாளையம் 
8. வீராஸ் - சத்தியமங்கலம்
9. கனபதி - ஊட்டி
10. விஷ்ணு - பவானி

 

புத்தம்புதிய படங்கள் வராத நிலை

கடந்த மார்ச் (2018) மாதம் முதல் தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள், மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து மொழி மற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் தான் வெளியாகின, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இல்லாததால் திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.

 

ஒரு சில ஆங்கில திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் வெளியாகி இருந்தாலும் கூட்டம் ஓரளவிற்கு தான் வந்தது. பிறகு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தி ஹரிகேன் ஹீஸ்ட (The Hurricane Heist) திரைப்படம் வெளியானது, ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால், நேற்று வரைதான் நீடித்தது. ஹாலிவுட் புகழ் ராக் அவர்களின் புதிய திரைப்படமான ராம்ப்ஏஜ் (Rampage) இன்று வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அனைவருக்கும் இனிய தமிழ் பூத்தாண்டு வாழ்த்துக்கள்.

 


தமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்