ads

தீரன் அதிகாரம் ஒன்று - இசை வெளியீடு

தீரன் அதிகாரம் ஒன்று - இசை வெளியீடு

தீரன் அதிகாரம் ஒன்று - இசை வெளியீடு

சிறுத்தை படத்தினை தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். சதுரங்க வேட்டை படத்தினை இயக்கிய வினோத் இப்படத்தினை இயக்குகிறார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுத்துள்ள இந்த படத்தில் கார்த்தி இது வரை பார்க்காத கதாபாத்திரம் கொண்ட தோற்றத்தில் களமிறக்கியிருக்கிறார்.    

இப்படத்தின் ட்ரைலர் பார்த்தால் காவல் நிலையத்தில் ஏதோ தவறு நடந்தது போன்றும், அதில் கை ரேகை மட்டும் இருப்பதை வைத்து கார்த்தி தவறு செய்த குழுவை கண்டுபிடிக்கும் போது நடக்கும் சுவாரிஸ்யமான நிகழ்வு இப்படத்தின் மையக்கருத்து போன்று தெரிகிறது.    

கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த படத்தில் ஷிப்ரான் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு மற்றும் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் வேலையும் செய்துள்ளனர். எஸ் ஆர் பிரகஷ்பிரபு தயாரிக்கும் இப்படத்தினை நவம்பர் 17ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.      

 'ட்ரீம் வாரியோர் பிக்சர்ஸ்' தயாரித்து ஜிப்ரான் இசையமைத்த படத்தின் இசை நவம்பர் 2ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பஸ்ட் லுக், ட்ரைலர் போன்றவை வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.  

தீரன் அதிகாரம் ஒன்று - இசை வெளியீடு