ads
இது எங்கோ பார்த்த மாதிரி இருக்கே - பிரிட்டன்
விக்னேஷ் (Author) Published Date : Nov 11, 2017 12:30 ISTபொழுதுபோக்கு
பிரிட்டனில் வெஸ்ட் மிட்லண்ட்(West Midland) பகுதியில் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக நுழைந்து திருட முயன்றுள்ளான். அதற்கு அந்த வீட்டில் ஜன்னல் வழியாக நுழைய முற்பட்டபோது உள்ளேயும் வரமுடியாமல் வெளியேயும் செல்ல முடியாமல் திண்டாடியுள்ளான். சுமார் 5 மணி நேரமாக கதறி அழுதுள்ளான். தகவல் அறிந்த வெஸ்ட் மிட்லண்ட்(West Midland) போலீசார் அவனை பத்திரமாக மீட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த காமெடி எங்கோ பார்த்த மாதிரி இருக்குல்ல. இது சுந்தர்.சி இயக்கத்தில் 2012 -இல் வெளிவந்த 'கலகலப்பு' படத்தில் நடிகர் சிவா இந்த யுக்தியை கையாள்வார். ஆனால் இந்த படத்திலும் அவர் அடி உதை தான் வாங்கினார். இதே யுக்தியை தான் அந்த திருடனும் பயன்படுத்தியிருக்கிறான். சுந்தர்.சி-இன் கலகலப்பு பிரிட்டன் வரை பரவி இருப்பது பெருமை தான். இப்போது 'கலகலப்பு-2' வரப்போகிறது என்ன நடக்கபோகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.