ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட சூர்யா இயக்குனர்
ராதிகா (Author) Published Date : Feb 05, 2018 10:36 ISTபொழுதுபோக்கு
கடந்த 2012ல் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் எழுத்தாளராக திரையுலகில் அறிமுகமானார் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இதற்கு அடுத்த படியாக சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தினை உருவாக்கி பொங்கல் விருந்தாக வெளியிடப்பட்டது. மேலும் இப்படம் 25வது நாளாக திரையரங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்டிகள் கடந்த மாதத்தில் எந்த ஒரு படமும் சரியாக ஹிட்டாக வில்லை என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர். இதனை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் அந்த நபரை திட்டியிருந்தது வலைத்தளத்தில் பரவியது. மேலும் ரசிகர்கள் மத்தியில் விக்னேஷ் சிவன் அன்பான இயக்குனர் என்று பெயர் பெற்றதின் காரணத்தினால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சில மணி நேரத்தில் ட்விட்டரில் பதிவு செய்திருந்ததை விக்னேஷ் சிவன் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புது தகவலை பதிவு செய்துள்ளார். இதில் இனி இது போன்ற நெகட்டிவ் செயலில் ஈடுபட மாட்டேன். மன்னித்துவிடுங்கள் கோபம் பட்டுவிட்டேன். மேலும் நீங்கள் எனக்கு அன்பான இயக்குனர் என்று பெயர் கொடுத்தீர்கள் என்று பதிவு செய்துள்ளார்