தூக்கத்தில் மாரடைப்பால் இறந்த தொலைகாட்சி நடிகர் கரண் பரஞ்செபி

       பதிவு : Mar 27, 2018 12:30 IST    
தில் மில் கையி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். தில் மில் கையி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

இந்தி மொழியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் 'தில் மில் கையி' என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண் செவிலியர் வேடத்தில் ஜிக்னேஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் இறந்துள்ளார். இந்த செய்தியறிந்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர்.

கரண் பாரஞ்செபி மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 26. இவருடைய வீட்டில் படுக்கைறையில் பிணமாக இருப்பதை அவரது தயார் கடந்த ஞாயிற்று கிழமை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் கரண் தூக்கத்தில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர் இறந்திருக்க கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவருடைய இழப்பிற்கு அவருடன் பணிபுரியும் கலைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 


தூக்கத்தில் மாரடைப்பால் இறந்த தொலைகாட்சி நடிகர் கரண் பரஞ்செபி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்