ads

அதிதி ராவுடன் இணைந்து சைக்கோவாக மாறிய உதயநிதி

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ள புது படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ள புது படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் பிரியதர்சனின் 'நிமிர்' படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை அதிதி ராவ் உதயநிதி ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

இதனை இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ள PC ஸ்ரீராம் உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளரான இவர் யாவரும் நலம், ஐ, ஓ காதல் கண்மணி, ரெமோ போன்ற பல படங்களில் பணிபுரிந்துள்ளார். இது தவிர ஒரு இயக்குனராகவும் 1990 காலங்களில் மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.  உதயநிதி மிஷ்கினுடன் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு 'சைக்கோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், இயக்குனர் ராம் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதிதி ராவுடன் இணைந்து சைக்கோவாக மாறிய உதயநிதி