ads

'உள்குத்து' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ulkuthu movie poster

ulkuthu movie poster

  கார்த்திக் ராஜா மற்றும் தினேஷ் 'திருடன் போலீஸ்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'உள்குத்து'. இந்த படத்தை கனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரிக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தினேஷ், நந்திதா, சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன். செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மேலும் இந்த படத்தில் 'அட்டகத்தி' படத்திற்கு இரண்டாவது முறையாக தினேஷ் - நந்திதா இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 22-இல் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள 'வேலைக்காரன்' படமும், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்க போடு போடு ராஜா' போன்ற படங்கள் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

'உள்குத்து' ரிலீஸ் தேதி அறிவிப்பு