ads

பலூன் ட்ரைலரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

balloon trailer

balloon trailer

ஜெய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'பலூன்'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை முன்னதாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பிறகு ஜெய் ஜோடியாக அஞ்சலி இணைந்துள்ளார். 

பலூன் ட்ரைலரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா