Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வைஷ்ணவி வெளியேற்றப்படுவாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 2, 40 நாட்களை கடந்து விட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நில அபகரிப்பு டாஸ்க்கும் முடிவுற்றது. ஐஸ்வர்யாவுக்கும் ரித்விகாவுக்கும் இடையேயான ஒற்றுமையும் முறிந்து போனது. இதன் பிறகு பிக்பாஸின் புதிய தலைவராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளே ஷாரிக், மகத் இருவரையும் எழுப்புவதற்கு படாதபாடு பட்டுவிட்டார்.

தலைவர் ஐஸ்வர்யாவின் ஆளுமை திறனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாளை பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேறப்போகும் நபர் யார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. எலிமினேஷன் பட்டியலில் வைஷ்ணவி, பாலாஜி, பொன்னம்பலம், மும்தாஜ், மகத், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எலிமினேஷனில் வெளியேறப்போவது வைஷ்ணவியாக இருக்கலாம் என்று பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இருக்கும் 11 போட்டியாளர்களிடமும் வைஷ்ணவி, ஜால்றா பெயருகேற்றவாறு கெட்ட எண்ணத்தை சம்பாதித்து விட்டார். இதனால் அவர் முகத்தை காணும் போதே ரசிகர்கள் ஆத்திரமடைகின்றனர். போட்டி, பொறாமை, கருத்து வேறுபாடு நிறைந்த பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தவிர வெளியேற்றப்பட்ட நபருக்கு பதிலாக புதியதாக ஒரு போட்டியாளரை சேர்க்க உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக வரும் நபர் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற படங்களின் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள பூஜா குமாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது டிரைலரும் வெளியாகவுள்ளது.

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி