Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகவுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ட்ரைலரை தொடர்ந்து நேற்று 'சாதி மதம்' என்ற பாடலின் லிரிக் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலரை இன்று இரவு நடக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளதாக தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 41வது நாள் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. கடந்த சில தினங்களாக நில அபகரிப்பு டாஸ்க் இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக நிகழ்ந்து வந்தது. இந்த டாஸ்கில் தற்போது மும்தாஜின் மஞ்சள் அணி வென்றுள்ளது. இந்த டாஸ்க்கிற்கு பிறகு போட்டியாளர்களிடையே பிக்பாஸ் இறுதி வரை சென்று போட்டியை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

இது தவிர நகமும் சதையுமாக பழகி வந்த யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் இந்த டாஸ்க்கிற்கு பிறகு பிரிந்து எலியும், பூனையுமாக சண்டை போட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக யாஷிகாவும், சென்றாயனும் இந்த வார எலிமினேஷனில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால் மோசமாக விளையாடிய மும்தாஜ் மற்றும் பொன்னம்பலத்தை மூன்று கூடை நிறைந்த ஷூக்களுக்கு பாலிஸ் போட வைத்துவிட்டது பிக்பாஸ்.

இதன் பிறகு ரசிகர்களிடம் பிக்பாஸ் எதிர்பார்ப்பிற்கேற்ப அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது  பரபரப்பாக, கலவரமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தின் அடுத்த ட்ரைலருக்காகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவும் ரசிகர்கள் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு