Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு

விஸ்வரூபம் 2 படத்தின் மூன்றாவது சிங்கிள் லிரிக் விடீயோவை இன்று இரவு 7மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கமல் ஹாசனின்  எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'விஸ்வரூபம் 2'. தூங்கா வனம் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியாகும் இந்த படம் கடந்த 5 வருடங்களாக உருவாகி வந்தது.

கடந்த 2013இல் வெளியான 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கின்றனர். ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு முன்னதாக வெளியிட்டுள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் 'சாதி மதம்' என்று தொடங்கும் பாடலின் சிங்கிள் வீடியோ ஒன்றை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவதாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு நடிகர் கமல் ஹாசன் பாடல் வரிகளை அமைத்துள்ளார். பாடகர் சத்யப்ரகாஷ், நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ஏற்கனவே கமல் ஹாசன் மற்றும் வைரமுத்து எழுதியிருந்த நானாகிய நதிமூலமே, நியாபகம் வருகிறதா பாடல்களின் சிங்கிள் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் மூன்றாவது பாடலின் சிங்கிள் விடியோவை இன்று வெளியிட உள்ளது. 

கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு