Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வேலைக்காரன் செட் மக்கள் பார்வைக்கு திறப்பு

velaikkaran set visit is open to public

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகரான ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதோடு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும்  பணிபுரிந்துள்ளார். இந்த படத்திற்கு திரையுலக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, படத்தின் ப்ரோமோ விடீயோஸ், படத்தின் சில காட்சிகள் என படக்குழு வெளியீட்டு வருகிறது. மேலும் இந்த படத்திற்காக போடப்பட்ட செட் மக்கள் பார்வைக்கு டிசம்பர் 30-ஆம் தேதி (இன்று) திறந்து விடுவதாக படக்குழு முடிவு செய்தது. அதன்படி தற்போது வேலைக்காரன் செட் மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஏராளாமான மக்கள் படப்பிடிப்பு தளத்தை கண்டுகளித்து புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

வேலைக்காரன் செட் மக்கள் பார்வைக்கு திறப்பு