Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாருக்கு நன்றியை தெரிவித்த வேலைக்காரன் படக்குழு

24 AM studios thanks to rajinikanth

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறுஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும்  பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தினை பார்த்த  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த படம் என்று கூறி  சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

இதனை தொடர்ந்து படத்தினை தயாரித்த ’24 AM ஸ்டுடியோஸ்' நிறுவனம் 'வேலைக்காரன் படம் பார்த்து சிறந்த படம் என்றும், மக்களுக்குத் தேவையான,மக்களுக்கு அவசியமான மிகப் பெரிய பிரச்சினையைத் தொட்டிருக்கிறீர்கள் என்றும் மனதார பாராட்டிய நம் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று அவர்களது ட்விட்டரில் பதிவு செய்து நன்றியை தெரிவித்துள்ளனர்.  

சூப்பர் ஸ்டாருக்கு நன்றியை தெரிவித்த வேலைக்காரன் படக்குழு