Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வேலைக்காரனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

rajini wishes velaikkaran

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறுஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியிட்ட ப்ரோமோவில் 'எவனா இருந்தாலும் சரி..ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்..'  'உலகில் தலைசிறந்த சொல் செயல்'  போன்ற சிவாவின் வசனம் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது.  

’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும்  பணிபுரிந்துள்ள இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என திரையுலக வட்டாரங்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தினை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

வேலைக்காரனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்