இளவரசருக்காக காத்திருக்கும் காமெடி நடிகை வித்யு ராமன்

       பதிவு : May 26, 2018 14:27 IST    
காமெடி நடிகை வித்யு ராமன் இளவசருக்காக காத்து கொண்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காமெடி நடிகை வித்யு ராமன் இளவசருக்காக காத்து கொண்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகையான வித்யு பாலன், 2012இல் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். இந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சம்திங், சம்திங், வீரம், வேதாளம் போன்ற 36 படங்களில் நடித்து விட்டார். நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருக்கும் வரை அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது சந்தானம் தற்போது ஹூரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

இதனால் சந்தானம் போன பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது.  தமிழில் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாததால் சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டும் அதிகமாக நடித்து வருகிறார். அதிகமாக படங்கள் இல்லாததால் தற்போது இவர் சுற்றுலாவுக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு உள்ள பக்கிங் ஹாம் பேலஸின் முன்பு புகைப்படம் எடுத்து சமீபத்தில் நடந்த பிரிட்டன் இளவரசர் திருமணத்தை கலாய்க்கும் விதமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்த இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்களே திருமணம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. அதே போன்று 22 வருடங்களுக்கு முன்பு நடிகை மேகன் மார்களே பக்கிங் ஹாம் பேலஸின் முன்பு எடுத்த புகைப்படமும் வைரலானது. இதனை வைத்து பேலஸின் முன்பு போட்டோ எடுத்ததால் 22 வருடங்களுக்கு பிறகு மேகன் மார்களேக்கு இளவரசரை மணக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கிண்டலிடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது காமெடி நடிகை வித்யு ராமனும் பேலஸ் முன்பு போட்டோ எடுத்து நடிகை மேகன் மார்களே போன்று இளவசருக்காக 22 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என கிண்டலடித்துள்ளார்.


இளவரசருக்காக காத்திருக்கும் காமெடி நடிகை வித்யு ராமன்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்