ads
விஜய் ஆண்டனியின் புது பட தகவல்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 28, 2017 22:33 ISTபொழுதுபோக்கு
நான், சலீம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கு அடுத்த படியாக ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை' படத்தில் முதல் முறையாக இரு வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்த படத்தின் மூலம் பல நிகழ்வுகளில் முதல் முறையாக ஈடுபட்டிருந்தார். விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' படத்தின் மூலம் எடிட்டிங், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் போன்ற பணிகளை இப்படத்தின் மூலம் கையாண்டார்.
மேலும் இப்படத்திற்கு அடுத்த படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'காளி'. இந்த படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு சொந்தமான 'பாத்திமா விஜய் ஆண்டனி' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆண்டனி தயாரித்து நடித்து வரும் இப்படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா உட்பட நான்கு நாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் புது பட தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை ஆண்ட்ரு லூயிஸ் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிட படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கவிருப்பதாகவும் தகவலில் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தின் நாயகி, இதர நடிகர் - நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய பட்டியல் விரைவில் வெளியிட உள்ளனர்.