ads

சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள விஜய் தேவரகொண்டா

இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா

இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா 'சூர்யா 38' படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் நடிக்க உள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா, தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' படத்திலும், இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 'சூர்யா 37' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'NGK' படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா, கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்காக நொய்டா சென்றுள்ளார். இந்த படத்திற்காக சூர்யா ராணுவ அதிகாரி கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக 'இறுதி சுற்று' படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது. இந்த படம் இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாக உள்ளதாம். இதனால் சூர்யாவுடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா தற்போது தமிழில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'நோட்டா' படத்திலும், தெலுங்கில் சிவா இயக்கத்தில் 'டேக்சிவாளா' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு சூர்யாவும், விஜய் தேவரகொண்டாவும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள விஜய் தேவரகொண்டா