Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மெர்சல் படத்தின் மேக்கிங் புதிய வீடியோ - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

mersal making video

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வசூலை பெற்ற 'மெர்சல்'  இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்யின்  மூன்று தோற்றத்திற்கும் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என்ற மூன்று நாயகிகள் இணைந்துருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா நடிக்க  சிறப்பான கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருந்தார்.

பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்திருந்த இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட்டனர். தெலுங்கில் 'அதிரந்தி' என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்திற்கு 'இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ரூபன் படத்தொகுப்பை மேற்கொண்டிருந்தார்.     

இந்நிலையில் இப்படத்தினை தயாரித்த ஹேமா ருக்மணி அவர்களது ட்விட்டரில் படத்தின் 'VFX BREAKDOWN' என்ற புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.  

        

மெர்சல் படத்தின் மேக்கிங் புதிய வீடியோ - மகிழ்ச்சியில் ரசிகர்கள்