ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்

       பதிவு : Nov 01, 2017 23:36 IST    
ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்

விஜய்சந்தர் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த  'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரம்  நடித்துள்ளார். முதல் முதலாக விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ள இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளிவந்து பக்கா மாஸ் அடித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதியை அடைந்த நிலையில், படக்குழுவினர் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   

மகளின் கல்யாணத்தில் பிசியான விக்ரம் ,இன்று முதல் முதலாக அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகான டப்பிங் பணியை தொடங்கினார். இதற்கு அடுத்த படியாக தமன்னா முடித்தவுடன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தையும் குறிகிய காலத்தில் முடித்து இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை சுகுமார், எடிட்டிங் ரூபன் கவனிக்‌க, எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். 

 

இந்த படத்தனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி, கௌதம் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடித்த படியாக சாமி ஸ்கொயர் வெளிவர உள்ளது. 


ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்