ads
முதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள யோகி பாபு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Oct 10, 2018 05:30 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 'அட்டரண்ட்டிகி தாரெடி' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்த கவுதம் நந்தா மற்றும் சித்து என்ற இரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமந்தாவின் கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகை ப்ரணிதா நடித்த கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசாவும், நந்தியா நடித்த அத்தை கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடிக்க உள்ளனர்.
இவர்களுடன் தற்போது காமெடி நடிகராக யோகி பாபு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். முன்னதாக அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த யோகி பாபு தற்போது சிம்புவுடனும் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
முன்னதாக ஜியார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு கலந்து கொண்டு நடித்து வருகிறார். அடுத்த ஆண்டில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது.