சிவகார்த்திகேயன் ராஜேஷ் கூட்டணியில் இணைந்துள்ள பிரபலங்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 23, 2018 11:14 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீம ராஜா' படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு நிகழ்ச்சி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களை இயக்குனர் ரவிக்குமார் மற்றும் இயக்குனர் ராஜேஷ் இயக்க உள்ளனர்.
'இன்று நேற்று நாளை' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் இயக்குனர் ரவிக்குமார் அறிவியல் சார்ந்த படமாக உருவாக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசைப்புயல் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் காமெடி நடிகர்களாக கருணாகரன், கோதாண்டம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனை அடுத்து கலகலப்பான இயக்குனரான ராஜேஷ் இயக்கத்தில் நாயகனாக சிவகார்த்திகேயனும், நாயகியாக நயன்தாராவும் நடித்து வருகின்றனர்.
தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் காமெடி நடிகராக சதிஷ் நடித்து வரும் நிலையில் யோகி பாபு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளனர். இது குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே யோகிபாபு இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் இயக்குனர் ராஜேசுடனும் இணைந்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா இந்த படத்தை தயாரித்து வருகிறார்.