ஒரு வருடம் கழித்து ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் விடீயோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர்
வேலுசாமி (Author) Published Date : Dec 20, 2017 11:59 ISTPolitics News
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ஆம் தேதி கிட்டத்தட்ட 75 நாட்கள் சிகிச்சை பெற்ற பின் உயிரிழந்தார். ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரை பற்றிய எந்த புகைப்படமும் வெளிவரவில்லை. அவர் சிகிச்சை பெற்ற போது நன்றாக இட்லீ சாப்பிடுகிறார், விரைவில் நலமாக திரும்பி வருவார் பலரும் பொய்யான தகவலை தெரிவித்தனர். தீடிரென்று அவர் இறந்துவிட்டதாக யாரும் எதிர்பாரா தருணத்தில் தெரிவித்தனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, தீபா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வம் கூட நான் ஒருநாளும் சிகிச்சை பெற்றபோது அவரை சந்திக்க வில்லை என்று தெரிவித்திருந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலராலும் கோரிக்கை வைக்கப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது.
அவரது மரணம் குறித்து விசாரிக்க அப்பல்லோ ஊழியர்கள் உள்பட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து தற்போது ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. பரபரப்பான இந்த சூழலில் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பழச்சாறு அருந்தும் வீடியோ ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த வீடியோ எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை. மேலும் ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இடைத்தேர்தலில் வெற்றிபெற அவர்கள் செய்யும் கோழைத்தனமான செயல் என்று கருத்து பதிவிட்டுள்ளார் நெட்டிசன்கள்.