நிதிநிலை அறிக்கையை பற்றிய கமல் ஹாசன் கருத்து ஆய்வுகள் மேற்கொண்டதால் தாமதம்
விக்னேஷ் (Author) Published Date : Mar 16, 2018 17:39 ISTPolitics News
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டின் இந்த பட்ஜெட்டுக்கு ஏராளமான பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு கமல் ஹாசனை தற்போது தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் "இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டின் நகலே. இதில் விவசாயிகள், மீனவர்கள் போன்றோருக்கு சிறப்பான திட்டமாக இல்லை. எம் தமிழக மக்களுக்கு வருங்காலத்தை வடிவமைக்க இதை விட சிறப்பான பிரதிநிதிகள் தேவை. தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கு மேல். அதிலும் வேலை தேடுபவர்களில் இளைஞர்களே அதிகம். கடந்த 7 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் மட்டுமே திறன் பெற்றனர்.
அதில் 1 லட்சம் இளைஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். இதில் வேலை வாய்ப்பு எங்கே?..திறன் மேம்பாடு எங்கே?..குடிகிராமத்து என்ற பாரம்பரிய நீர்நிலை மேம்பாட்டிற்கு 300 கோடி ஒதுக்கீடு. சென்ற ஆண்டும் இதே தொகையை தான் ஒதுக்கினார்கள். அந்த தொகை எங்கே செலவிடப்பட்டது என்பதற்கு விளக்கம் கிடைக்குமா?.
270000 கோடி ரூபாய் பள்ளி கல்விக்காக செலவழித்தும் எமது பிள்ளைகள் சராசரி பாடங்களை விட பின்தங்கியிருக்கிறார்கள். தமிழ் மொழி உள்பட. இது தான் அமைச்சர் மார்தட்டி கொள்ளும் தரமான கல்வியோ?. எங்களுக்கு செலவீடல்ல. நல்ல விளைவுகளே தேவை." என்று அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.