ads
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் டி ராஜேந்தர் சபதம்
விக்னேஷ் (Author) Published Date : Feb 24, 2018 16:19 ISTPolitics News
நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான டி ராஜேந்தர் அனைத்திந்திய லட்சிய திராவிடர் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதில் அவருடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் "இன்று வரை சாணக்கியனாக பார்த்த என்னை இனிமேல் சத்ரியனாக பார்க்க போகிறீர்கள். வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான அறிவிப்பை தெரிவிப்பேன். சிம்புவுக்கு நான் பாதர் என்றால் சிம்புவின் ரசிகர்களுக்கு நான் காட் பாதர்.
அரசியல் சிக்கலானது என்பதால் சிம்புவை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. சிம்பு அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட முடிவு. சிம்புவை ஒழித்து கட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர். இந்த தடைகளை தாண்டி அவர் வெற்றி பெறுவார். கமல் ரஜினியின் அரசியல் வருகையால் களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.