ads
கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பூந்தமல்லி இளைஞர்கள்
விக்னேஷ் (Author) Published Date : Mar 05, 2018 12:53 ISTPolitics News
நடிகர் கமல் அவர்களின் புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் நாளுக்கு நாள் ஆதரவாளர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியில் மக்களை இணைப்பதற்கு பல்வேறு முறைகள் இருக்கிறது, நேரடியாகவும் அல்லது மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இணையலாம்.
பூந்தமல்லியை சேர்ந்த இளைஞர்கள் 500கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மக்கள் நீதி மய்யதின் கட்சி தலைவரும் நடிகருமான திரு கமல்ஹாசன் அவர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை அன்புடன் வரவேற்ற கமல் அவர்கள், இளைஞர்களின் ஆதரவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேர்மையாகவும் நேர்மையக்கு அடையாளமாக தொண்டர்கள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.