ads
கருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 07, 2018 12:19 ISTPolitics News
கடந்த 10 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 94 வயதை எட்டியதால் இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. முன்னதாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி ரத்த அழுத்தம் சீரானதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் கருணாநிதி உடல்நிலை மோசமான சூழ்நிலைக்கு சென்றுள்ளது.
இதனால் காவேரி மருத்துவமனை 24 மணிநேரம் கழித்து தான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கருணாநிதி உடல் நிலை மோசமடைந்ததால் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தொண்டர்கள் கூட்டமும் மருத்துவமனை முன்பு அலைமோதி வருகிறது. இதனால் கலவரம் ஏதும் ஏற்படாத வகையில் மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கருணாநிதி உடல் நிலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் 500 போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தமிழக ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். இதன் பிறகு தற்போது பிரதமர் மோடியும் காவேரி மருத்துவமனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.