ads

நான் இறந்த பிறகு என்னுடைய கல்லறையில் இந்த வாக்கியத்தை எழுதுங்கள் - கருணாநிதி

மறைந்த தலைவர் கருணாநிதி இறந்த பிறகு அவருடைய கல்லறையில் இந்த வாக்கியத்தை எழுத சொன்னதாக பகிரப்பட்டு வருகிறது.

மறைந்த தலைவர் கருணாநிதி இறந்த பிறகு அவருடைய கல்லறையில் இந்த வாக்கியத்தை எழுத சொன்னதாக பகிரப்பட்டு வருகிறது.

மறைந்த திமுக கலைஞர் கருணாநிதி தன்னுடைய 94வது வயதில் காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் போராட்டங்களுக்கு பிறகு உயிர் திறந்துள்ளார். மக்களுக்காக பல போராட்டங்களை வழிநடத்தியுள்ள இவர், இறந்த பிறகும் தன்னுடைய கல்லறைக்காக போராடி வெற்றி பெற்றுள்ளார். இவருடைய உடல் மாலை 4:30 மணியளவில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் இருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இவரின் பிரிவை தாங்க முடியாமல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் அவரின் நினைவாற்றலை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தும தான் அமெரிக்காவில் இருந்தாலும், அவரின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருடைய உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முக ஸ்டாலின் கண்ணீருடன் தனது நன்றியினை தெரிவித்தார். தற்போது கலைஞர் கருணாநிதி,தனது கல்லறையில் எழுத சொன்னதாக 'ஓயாது உழைத்தவன் இங்கே உறங்குகிறான்' என்ற வாக்கியம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் தான் இறப்பதற்கு முன்பு இறுதியாக அவர் எழுதிய வாக்கியம் 'தமிழ் வெல்லும்' என்பதே என்றும் கூறப்படுகிறது.

நான் இறந்த பிறகு என்னுடைய கல்லறையில் இந்த வாக்கியத்தை எழுதுங்கள் - கருணாநிதி