அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது

       பதிவு : Mar 30, 2018 10:10 IST    
திருப்பூர் அதிமுக லோக்சபா உறுப்பினர் சத்யபாமா கணவர் வாசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் அதிமுக லோக்சபா உறுப்பினர் சத்யபாமா கணவர் வாசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது 
திருப்பூர் லோக் சபா எம்பியாக உள்ளவர் சத்யபாமா. இவருக்கு வயது 45. இவர் கடந்த 2014 தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுகவில் இருந்து லோக் சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் அவருடைய கணவர் வாசுவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் இருந்து வருகிறது.

கணவர் வாசு, கடந்த 2016இல் சத்யபாமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வாசுவின் பெயரில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், தன்னிடம் இருக்கும் நிலத்தை அடமானம் வைத்த பணம் பெற்று தர வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் எனக்கும், சத்யபாமாவுக்கும் 1990-இல் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் சத்யபாமா தற்போது கோபிசெட்டிபாளையம், ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது வாசுவை, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சத்யபாமாவின் சகோதரர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசுவை கைது செய்துள்ளனர்.

 


அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்