ads
கிரிக்கெட் வீரர் ஜாகிர்கான் இந்தி நடிகையை மணந்தார்
யசோதா (Author) Published Date : Nov 23, 2017 21:20 ISTSports News
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். இவரும் பாலிவுட் நடிகை சகாரியா காக்தேவும் ஒருவரையொருவர் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களின் காதலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டுள்ளனர். இவர்களது வீட்டார் சம்மதத்துடன் இந்தாண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து ஜாகிர்கான் இந்தி நடிகை சாகரிக்கா காக்தேவை தற்போது திருமணம் செய்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பதிவு திருமணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவரது நண்பர்களும் பிரபலங்களும் ஜாகிர்கான் -சாகரிக்கா புகை படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.