ஐபிஎல் 2018 கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம்
வேலுசாமி (Author) Published Date : Jan 29, 2018 16:02 ISTSports News
இந்தியாவின் 11 வது ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டிக்கு தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமாக அதிகரித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த இரு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஏலம் பெங்களூரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த போட்டியில் 18 வீரர்கள் மட்டும் தக்க வைக்கப்பட்டு மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வந்தனர். முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில் மொத்தமாக 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். அதன் பிறகு அடுத்த நாள் ஏலத்தில் மொத்தமாக 91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த இரண்டு நாள் ஏலத்தில் மொத்தம் 169 வீரர்களுக்கு மொத்த அணிகளும் 431.70 கோடி செலவு செய்துள்ளது.
தற்போது ஏப்ரலில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம் வந்துள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 25 வீரர்களும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் 24 வீரர்களும், கெளதம் கம்பிர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 25 வீரர்களும், யுவராஜ் சிங் தலைமையிலான கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியில் 21 வீரர்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 19 வீரர்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 23 வீரர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 24 வீரர்களும், சன்ரைசஸ் ஆப் ஐதராபாத் அணியில் 25 வீரர்களும் மொத்தமாக 169 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் 61 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களும், 101 வீரர்கள் உள்ளூர் வீரர்களும் களமிறங்குகின்றனர். மேலும் இரண்டு நாள் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டை 11.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. மற்ற வீரர்கள் மெதிவ்ஸ், மோர்கன், மலிங்கா போன்ற வீரர்களை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வர வில்லை.