ads

நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் கேப்டன் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்வதாக கேப்டன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்வதாக கேப்டன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நிகழ்ந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் பான்க்ராப்ட், மஞ்சள் நிற சொரசொரப்பான துணியை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னால் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் ஓராண்டிற்கு விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த முறை நடைபெறும் 11வது ஐபிஎல்லிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய கேப்டன் ஸ்மித் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளார். அதில் "ஒரு கேப்டனாக இதற்கு முழு பொறுப்பையும் ஏற்று கொள்கிறேன். ஒரு கேப்டன் என்ற முறையில் இந்த சம்பவம் தோல்வியா கொடுத்துள்ளது. என்னுடைய கண்காணிப்பில் இந்த சம்பவம் நடந்தது. யாரையும் பழி வாங்குவதற்காக இதை செய்யவில்லை" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் கேப்டன் ஸ்மித்