ads
வர்த்தக தளங்களில் வாங்கும் ஆடைகளை சரிபார்க்க 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பம்
விக்னேஷ் (Author) Published Date : May 10, 2018 12:49 ISTTechnology News
பெரும்பாலான மக்கள் தற்போது எந்த பொருட்கள் வாங்க விருப்பப்பட்டாலும் இணையதள வர்த்தக தளங்களை உபயோகித்து வருகின்றனர். ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் அதனை ஓரிரு நாட்களில் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கின்றனர். வர்த்தக தளங்களை உபயோகிப்பதால் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவது தற்போதைய மக்களிடையே பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மளிகை பொருட்கள் முதல் செல்போன், ஆடைகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர்.
ஆனால் வர்த்தக தளங்களை நம்பி வாங்கும் சில பொருட்கள் நமது ஆசைக்கேற்ப இருப்பதில்லை. இதனால் இது போன்ற பொருட்களை திருப்பி அனுப்பி விடுகிறோம். ஆனால் ஆடைகளை கடைகளில் வாங்கும் நமது தேவைக்கேற்ப ஒரு மணிநேரம் தாமதமானாலும் அளவு சரியாக உள்ளதா என சரிபார்த்து வாங்க முடிகிறது. இதனால் ஆன்லைனில் வாங்கும் துணிகள் பெரும்பாலும் அளவு சரியாக இல்லாததால் அதனை திருப்பி அனுப்பி விடுகிறோம். பெரும்பாலும் ஆர்டர் செய்த பொருட்களில் திருப்பி அனுப்பப்படுவதில் ஆடைகளே அதிகப்படியாக உள்ளது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை சரிசெய்ய வர்த்தக நிறுவனங்கள் 3D ஸ்கேனிங் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதன் ஆய்வு பணிகள் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுகளை வர்த்தக தளங்களில் பதிவு செய்து இருக்கும் இடத்தில் 3டி ஸ்கெனிங் மூலம் நீங்கள் ஆர்டர் செய்த துணிகள் அளவு சரியாக உள்ளது என சரிபார்த்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பம் அமல்படுத்த பட்டால் துணிகள் திருப்பி அனுப்பப்படுவதும் குறையும், ஆடைகளின் விற்பனையும் வர்த்தக தளங்களில் பெருமளவு அதிகரிக்கும்.