இனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்
வேலுசாமி (Author) Published Date : May 21, 2018 10:53 ISTTechnology News
கூகுள் நிறுவனத்தால் கடந்த 2008இல் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் குரோம் உலகம் முழுவதும் இணையதளம், ஆண்டிராய்டு, iOS போன்ற இயங்கு தளங்களில் பில்லியன் பயனாளர்களை கொண்டு 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த கூகுள் குரோம் தற்போது Beta, Dev, Canary போன்ற பதிப்புகளில் 47 மொழிகளில் கிடைக்கிறது. பயனாளரின் குறைகள் மற்றும் விமர்சனங்களுக்கேற்ப கூகுள் குரோம் சிறப்பு அம்சங்களுடன் புது அப்டேட்களில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கூகுள் குரோமை விண்டோஸ் இணையதளத்தில் இன்ஸ்டால் செய்ய இன்டர்நெட் தேவைப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் குறையாகவே உள்ளது. ஏனெனில் கூகுள் குரோமை இன்டர்நெட் மூலம் இன்ஸ்டால் செய்யும் போது இன்டர்நெட் வேகத்தை பொருத்து அதன் லேட்டஸ்ட் மாடலை இன்ஸ்டால் செய்ய முடியும். ஆனால் இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் பயனாளர்கள் கூகுள் குரோமை எளிதாக டவுன்லோட் செய்ய முடிவதில்லை.
இது தவிர, இதர தேடுதல் செயலிகளான மொசில்லா, யூசி புரவுஸர், ஒபேரா போன்றவற்றை ஒரு முறை டவுன்லோட் செய்து பல பயனாளர்களுக்கு அதனை பகிர முடியும். இந்த வசதி கூகுள் குரோமில் இல்லாமல் இருப்பதும் பயனாளர்களுக்கு குறையாகவே உள்ளது. ஆனால் கூகுள் குரோம் இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் இன்ஸ்டால் செய்யும் வசதியை கொண்டுள்ளது என்பது பெரும்பாலான பயனாளர்களுக்கு தெரிவதில்லை. இதன் மூலம் ஒரு முறை மட்டும் குரோமை டவுன்லோட் செய்து அனைவருக்கும் பகிர முடியும்.
கூகுள் குரோமின் Beta, Dev, Canary போன்ற வெர்சன்களை டவுன்லோட் செய்வதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Chrome Stable: https://www.google.com/chrome/?standalone=1Chrome Beta: https://www.google.com/chrome/?extra=betachannel&standalone=1Chrome Dev: https://www.google.com/chrome/?extra=devchannel&standalone=1Chrome Canary: https://www.google.com/chrome/?extra=canarychannel&standalone=1
இந்த இணைப்புகளை க்ளிக் செய்து கூகுள் குரோமை டவுன்லோட் செய்யும் போது 50MB அளவிலான முழு அம்சங்களுடன் கூடிய கூகுள் குரோம் டவுன்லோட் செய்யப்படும். இதனை டவுன்லோட் செய்து இன்டர்நெட் இல்லாமலும் ஆப்லைனில் இன்ஸ்டால் செய்யலாம். ஆனால் 32bit கூகுள் குரோமை கூகுள் தற்போது வழங்கப்படுவதில்லை. இதனால் இந்த முழு அம்சத்துடன் கூடிய 64Bit கூகுள் குரோம் மட்டுமே வழங்கப்படுகிறது. கூகுள் குரோம் தனது முழு பதிப்பை அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிப்பதில்லை. ஆனாலும் அதற்கான வழிகளை தனது பயனாளர்களுக்கு இந்த இணைப்பு மூலம் தெரிவித்துள்ளது.https://support.google.com/chrome/answer/95346?co=GENIE.Platform=Desktop&hl=en