ads
மாநகர பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க இனி ஒரே டிக்கெட்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 25, 2017 14:27 ISTTechnology News
சென்னையில் சர்வதேச மைய அலுவலகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்துகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் கலந்து கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "சென்னை நகரில் உள்ள சேர் ஆட்டோவில் பயணம் செய்வதற்கும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரயிலில் குளிர் சாதன வசதி உள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் பயணிக்க முடிகிறது.
சைதாப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான சுரங்கம் அண்ணாசாலையில் அமைக்கும் பணி மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. வடசென்னையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவுபெறும். வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்த சுரங்கப்பாதை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார ரயில்கள், மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.