ads

வாட்சப்பின் புதிய அப்டேட்

whatsapp new update

whatsapp new update

வாட்சப் நிறுவனமானது முதலில் ஜன் கோம், பிரையன் அக்டன் ஆகியோரால் 2009-இல்  நிறுவப்பட்டது. இவர்கள் இருவரும் யாகூ (Yahoo) நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். 55 பணியாளர்களை கொண்டு இந்த வாட்சப் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் ஒருவருக்கோ அல்லது குழுவினருக்கோ டெக்ஸ்ட் மெசேஜ் (Text Message) அனுப்புவது, வாய்ஸ் மெசெஜ் (Voice Message), புகைப்படங்கள் (Images), விடீயோக்கள் (Videos) போன்றவற்றை பரிமாறிக்கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டு வரை இந்த செயலியை 900 மில்லியன் மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்த வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் (Facebook) நிறுவனர்கள் 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து தன்வச படுத்தினர்.

வாட்சப் செயலியானது ஆண்ட்ராய்டு (Android), விண்டோஸ் (Windows), ஐஒஸ் (IOS), பிளாக் பெர்ரி (Blackberry) போன்ற இயங்குதளங்களில் செயல்படுகிறது. தற்போது ஐஒஸ் (IOS) வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் வாட்சப் அப்டேட் (Whatsapp Update) செய்துள்ளது. அதன்படி வாட்சப் மெசஞ்சர் 2.17.81 என்ற செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் (Picture-in-Picture Mode) மற்றும் நீண்ட அளவு குரல் பதிவை (Voice message) மற்றவர்களுக்கு அனுப்பமுடியும்.  

பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் (Picture-in-Picture Mode) என்ற பயன்பாட்டின் மூலம் தங்களுக்கு வரும் யுடியூப் வீடியோசை (Youtube Videos) வேறு தளத்திற்கு செல்லாமல் இயங்கும் தளத்திலிருந்தே பார்க்க முடியும். மேலும் நீண்ட அளவு வாய்ஸ் மெசேஜ் (Voice Message) மூலம் நீங்கள் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) பதிவு செய்யும் போது மேல் நோக்கி சுவைப் (swipe) செய்தால் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) லாக் (Lock) செய்யப்படும். அதன் பின் தேவைப்படும் போது அன்லாக் (Unlock) செய்து வாய்ஸ் மெசேஜ் (Voice Message) தொடரலாம். இதன் மூலம் நீண்ட நேரத்திற்கு பதிவு செய்து பெற்றவர்களுக்கு தகவலை பகிரலாம்.

வாட்சப்பின் புதிய அப்டேட்