ads
ரூபாய் 99 முதல் ஏர் ஏசியாவின் விமான அதிரடி சலுகை
யசோதா (Author) Published Date : Nov 13, 2017 16:43 ISTTours and Travels
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் ஏசியா விமான சேவை நிறுவனம் தற்போது சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில் 'பிக் சேல் ஸ்கீம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி குறைந்த பட்ச கட்டணமாக 99 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த வருடம் மே மாதம் 7-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி மாதம் 31-வரையிலான நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்யவும். இந்த சலுகை முன்பதிவு வரும் 19-இல் முடிவடைகிறது. ஜிஎஸ்டி வரி மற்றும் விமான சேவை வரி உள்ளிட்டவை பயண கட்டணத்தில் சேர்த்து வசூலிக்கப்படும்.
மேலும் அனைத்து வரிகளும் சேர்த்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வருக்கு 499 ரூபாயும், கொச்சியிலிருந்து பெங்களுரூவுக்கு 764 ரூபாயும், புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு 507 ரூபாயும், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு 571 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களின் கட்டண தகவல்கள் ஏர் ஏசியா இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் முன்பதிவு செய்த தொகை எக்காரணத்திற்காகவும் திருப்பி தர மாட்டாது என்று விதிமுறைகள் தெரிவித்துள்ளது.