ads

பெர்முடா முக்கோணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத ஏலியன் விண்கலம்

சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தில் ஏலியன் விண்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தில் ஏலியன் விண்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) அல்லது சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கப்படும் ஆபத்தான கடற்பகுதி அட்லாண்டிக்கின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல கப்பல்கள், விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இடத்தில் கப்பல்கள், விமானங்கள் காணாமல் போவதற்கான காரணங்களை தொடர்ந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டுதான் வருகின்றனர்.

இன்னும் அதிகாரபூர்வமான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கப்பல்கள் காணாமல் போவதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ சக்தி மற்றும் ஏலியன் போன்ற வேற்றுகிரக வாசிகள் தான் காரணம் என்று ஒரு வதந்திகள் கூறப்படுகிறது. இதற்கான காரணங்களை அறிய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பெர்முடா முக்கோணத்தின் ஒரு பகுதியான கரிபியன் தீவில் பஹாமாஸ் (Bahamas) என்ற இடத்தில் ஏலியன் விண்கலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றினை டிஸ்கவரி சேனல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல அனுபவம் வாய்ந்த ஆய்வாளரான டர்ரெல் மிஃலோஸ் (Darrell Miklos) இவருக்கு வயது 55. இவர் பெர்முடா முக்கோணத்தில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

ராட்சத அமைப்பு கொண்ட இந்த விண்கலம் குறித்து ஆய்வாளர் கூறுகையில் "கடலுக்கடியில் ஆய்விற்காக செல்லும் போது திடீரென பெரிய அமைப்பு கொண்ட விண்கலம் தென்பெட்டது. இந்த விண்கலம் கண்டிப்பாக வேறு கிரகத்தில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். நான் இது வரை பூமியில் இது போன்ற அமைப்பை கண்டதில்லை. இதனை ஆய்வு செய்தால் பல அதிசய தகவல்கள் கிடைக்கும். பெர்முடா முக்கோணத்தில், கரிபியன் தீவில் ஆய்வு செய்த போது இந்த விண்கலம் தென்பட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கலமானது, பல கப்பல்கள் காணாமல் போன அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விண்கலம் காணாமல் போன கப்பல், விமானங்களின் பகுதியாக இருக்கலாம் என்று விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் அது வேற்று கிரகத்தில் வந்த விண்கலம் தான் என்று டர்ரெல் மிஃலோஸ் (Darrell Miklos) அடித்து கூறுகிறார்.

ஆய்வாளர் டர்ரெல் மிஃலோஸ் (Darrell Miklos)ஆய்வாளர் டர்ரெல் மிஃலோஸ் (Darrell Miklos)

பெர்முடா முக்கோணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத ஏலியன் விண்கலம்